அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சமத்துவ உறுதிமொழி
அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மாவட்ட தலைமை நீதிபதி அன்னாரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி, சமத்துவ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தியாவின் சட்டம் எடை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றம் சார்பில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைமை நீதிபதி திருமதி விஜயகுமாரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக நீதிமன்ற வாசலில் அன்னாரின் திருவுருவப்படத்தின் முன்பு சமத்துவ உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி திருமதி விஜயகுமாரி உறுதி மொழியை வாசிக்க வழக்கறிஞர்கள் உறுதிமொழி மொழி ஏற்றுக் கொண்டனர்.