in

மிஸ் கூவாகம் – 2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வு


Watch – YouTube Click

மிஸ் கூவாகம் – 2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வு

விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம்–2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வானார்.

விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில்  காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு செயலாளர் கங்கா தலைமை தாங்கினார். அப்போது, மிஸ் கூவாகம் – 2024 போட்டியில் பங்கேற்றோரை,குழுவினர் தேர்வு செய்தனர். திருநங்கைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து, மிஸ் கூவாகம் – 2024 போட்டிக்கான முதல் சுற்றில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கொல்லம், ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில், இவர்களின் நடை, உடை, பாவனை மூலம் 15 பேர், 2வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி திடலில் மிஸ் குவாகம்–2024 கலை நிகழ்ச்சியும், மிஸ் குவாகம் இறுதிசுற்று தேர்வும் நடந்தது. அமைச்சர் பொன்முடி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், சேர்மன் தமிழ்ச்செல்வி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன் வாழ்த்தி பேசினர். சினிமா நடிகைகள் ரெபெக்கா, பிரமிளா, எதிர்நீச்சல் காயத்ரி முன்னிலை வகித்தனர்.

இறுதி சுற்றுக்கான முதல் சுற்றில், நடை, உடை, பாவனை போட்டியில் தூத்துக்குடி மேகா, கோவை எமி, தஞ்சை ஜொஸ்மா, விருதுநகர் ரேணுகா, ஈரோடு ரியா, சென்னை யுவாஞ்சலின், சேலம் கதிஜா ஆகிய 7 பேர் தேர்வாகினர்.
இதனையடுத்து, இறுதி சுற்று கேள்வி பதில் சுற்று நடந்தது. நிறைவாக ஈரோடு ரியா மிஸ் குவாகமாக தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடத்தில் தூத்துக்குடி மேகாவும், 3ம் இடத்தில் சென்னை யுவாஞ்சலின் ஆகியோர் தேர்வாகினர். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. 3 பேருக்கும் கிரீடம் சூட்டப்பட்டது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் மோகனாம்பாள் வரவேற்றார். அருணா, சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஏராளமான திருநங்கைகள், பொது மக்கள் பங்கேற்றனர். *இதுகுறித்து பேட்டி 1*ரியா மிஸ் குவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி அள்ளித்த siva கார்த்திகேயன்

வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்