in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 01-10-2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 01-10-2024

 

இரண்டு வாரமாக ஹெஸ்புல்லாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய துருப்புக்கள் லெபனானுக்குள் தரைவழி தாக்குதலை தொடங்கின. விமானப்படை மற்றும் பீரங்கிகளின் ஆதரவுடன் இஸ்ரேலை சேர்ந்த பராட்ரூப்பர்கள் மற்றும் கமாண்டோக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஹெஸ்பொல்லாவுடன் தற்போது “தீவிரமான சண்டை” நடைபெற்று வருவதாக இஸ்ரேல் கூறியது.”வடக்கு அம்புகள்” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த நடவடிக்கை, எல்லைக்கு அருகில் உள்ள தெற்கு லெபனான் கிராமங்களை இலக்காகக் கொண்டிருக்கிறது. லெபனான் எல்லையில் இஸ்ரேலிய துருப்புக்கள் குவிந்துள்ளதை .. அடுத்து’ நாம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும் என்று இஸ்ரேலிய படைகள் கூச்சளிட்டது.

மனிதாபிமாம் இல்லாமல் ஏறக்குறைய ஒரு வருட அழிவுகரமான யுத்தம், காசாவின் 2.4 மில்லியன் மக்களை சோகத்தில் ஆழ்தியது. முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று UNICEF அதிகாரி தெரிவித்தார். பாலஸ்தீனிய பிரதேசங்களுக்கான ஐ.நா. ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கிரிக்ஸ், காசாவிற்கு ஒரு வார காலப் பயணம் சென்றவர் இம்மாதம் திரும்பியுள்ளார், இஸ்ரேல் தனது இராணுவத்தை லெபனானுக்கு மாற்றியதால் மக்கள் இன்னும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து ஒரு நாள் கூட கல்வி கற்காத காஸாவின் குழந்தைகளின் அவலநிலை குறித்தும் வேதனயுடன் பேசினார்.

மத்திய கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் தீக்கிரையாகினர். தெற்கு கிரீஸில் உள்ள கடலோர ரிசார்ட்டுக்கு மேலே உள்ள வனப்பகுதியில் திடிர்ரென்று காட்டுத் தீ வரவியதால் ஒரே இரவில் இரண்டு பேர் மறைந்தனர்.

மத்திய கிரீஸில் உள்ள கரடுமுரடான மலைப் பகுதியில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு உதவ முயன்ரும் பலனளிக்கவில்லை, பல கிராமங்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏதென்ஸுக்கு மேற்கே 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் உள்ள கொரிந்துக்கு அருகில் உள்ள தீ, திங்களன்று, கடுமையான காற்று வீசியதால் இன்னும் எரிந்து கொண்டிருந்தது மீட்கப்பட்ட உடல்கலை அடையாளம் காண ஆய்வக சோதனைகள் அவசியம் என்றும் கிரேக்க காவல்துறை செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டினா டிமோக்லிடோ கூறினார்.

திங்களன்று, தென் கொரிய மாடல் அழகி சோய் சூன்-ஹ்வா, 80 வயதில், சியோலில் 32 பெண்களைக் கொண்ட குழுவுடன் போட்டியிட்டு, மிஸ் யுனிவர்ஸ் கொரியா என்ற பட்டதை மிக வயதான காலத்தில் வெல்வார் என்று எதிர்பார்க்கபட்டது. சோய் தான் இந்த போட்டியின் மிக வயதான இறுதிப் போட்டியாளர். சோய் 22 வயதான பேஷன் பள்ளி மாணவர் ஹான் ஏரியலிடம் தோற்றார், இந்த வயதிலும், ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கும் ஒரு சவாலை ஏற்றுக்கொள்வதற்கும் எனக்கு தைரியம் இருந்தது,” என்று சோய் போட்டிக்கு முன் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். “மக்கள் என்னைப் பார்த்து, நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களைக் கண்டறிந்து, அந்த கனவை அடைய உங்களுக்கு நீங்களே சவால் விடும் போது நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் வாழலாம் என்று சோய் கூறினார்.,

What do you think?

செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 97…ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 8 Final Contestant List