ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 04-10-2024
பிரிட்டன், மொரிஷியஸுக்கு தொலைதூர இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை விட்டுக் கொடுப்பதாகக் கூறியது, ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து இராணுவத் தளத்தை அங்கு பராமரிக்கப் போவதாகக் கூறியது. பிரிட்டிஷ் அரசாங்கம் பல தசாப்தங்களாக சாகோஸ் தீவுகளை முன்னாள் காலனியாக இருந்த மொரிஷியஸிடம் ஒப்படைக்க 50 ஆண்டுகளுக்கு மேலாக அழுத்தம் கொடுத்து வருகிறது. ” அமைக்க படும் தளத்தின் நிலை சந்தேகத்திற்கு இடமின்றி சட்டப்பூர்வமாக பாதுகாப்பாக இருக்கும்” என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஆரம்ப” கால குத்தகையாக 99 ஆண்டுகள் தளம் திறந்திருக்கும் என்று பிரிட்டிஷ்-மொரிஷியன் கூட்டு அறிக்கை கூறியது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தெற்கு லெபனானில் உள்ளனர் – இஸ்ரேல் அவர்களை நகருமாறு கேட்டுக் கொண்டாலும் – மற்ற நாடுகளின் இராணுவங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைப்பை வழங்குவதாக ஐ.நா. அமைதி காக்கும் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.” அமைதிகாப்பாளர்கள் தங்களின் பாதுகாப்பு கவுன்சில் ஆணையை வெளிப்படையாக மிகவும் கடினமான சூழ்நிலையில் செயல்படுத்த தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள்,” என்று ஐ.நா. அமைதி காக்கும் தலைவர் Jean-Pierre Lacroix செய்தியாளர்களிடம் கூறினார்,UNIFIL எனப்படும் இந்த mission…னானது, லெபனான் இராணுவம் லெபனான் அரசை தவிர ஆயுதம் ஏந்திய பணியாளர்கள் இல்லாத பகுதியை பாதுகாப்புடன் வைத்திருக்க இந்த கவுன்சில் கட்டளையிட்டுள்ளது, இந்த mission தெற்கு லெபனானை திறம்பட கட்டுப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றார்
UK பாராளுமன்றம் இந்த மாதம் இறப்பு உதவி சட்டத்தை பரிசீலிக்க உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக அசிஸ்டெட் டையிங் பில் தோல்வியடைந்து, மக்களின் கருத்து மாற்றத்திற்கு மத்தியில், எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுகொள்ள பட்டது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, UK பாராளுமன்றம் உதவியினால் இறப்பதை சட்டப்பூர்வமாக்குவதற்கான முன்மொழிவை பரிசீலிக்கும். ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிம் லீட்பீட்டர் அக்டோபர் 16 ஆம் தேதி, நோயுற்றவர்களுக்கு வாழ்க்கையின் இறுதிக் கவனிப்பை வழங்குவதற்கான ஒரு “தீர்வு இது “ மற்றும் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்புகளை வழங்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துவதாகக் கூறினார். 60 வருடங்களாக இந்தப் பிரச்சினையில் பிரிட்டிஷ் சட்டம் புதுப்பிக்கப் படவில்லை என்று லீட்பீட்டர் கூறினார். “மக்கள் தங்கள் வாழ்வின் கடைசி மாதங்களில் நம்பிக்கை மற்றும் நிவாரணம் பெறுவது மிக முக்கியம் இந்த சட்டத்தில் மாற்றத்தை பாராளுமன்றம் இப்போது பரிசீலிக்க முடியும். என்று கூறினர்.
உக்ரேனிய கார் வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய ஆக்கிரமிப்பு Zaporizhzhia அணுமின் நிலைய அதிகாரி ஒருவர்மறைந்தார். உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பான GUR, வெள்ளிக்கிழமை காலை கார் குண்டு வெடிப்பில் ஆண்ட்ரி கொரோட்கி கொல்லப்பட்டதாகக் கூறியது, அவரின் “உடல் அணுசக்தி தளத்தில் பாதுகாப்புத் தலைவர்” அடையாளம் காட்டினார்.