in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 06-11-2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 06-11-2024

எடின்பரோவில், இரவு நேரத்தில், நகரம் முழுவதும் குழப்பம் நிலவியது இளைஞர்கள் கூட்டம் போலீசார் மீது பட்டாசு, செங்கல் மற்றும் பாட்டில்களை வீசியுள்ளனர். Sighthill, Niddrie, Gracemount மற்றும் Gilmerton பகுதிகளில் நடந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் பதிலளத்த வீடியோ சமுக வளை தளத்தில் viral…ஆகி வருகிறது. எடின்பர்க் நகரின் தெருக்களில் ஹெல்மெட் அணிந்து, கேடயங்களை ஏந்திய வண்ணம், பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, கலகத்தில் ஈடுபட்டனர். ரோந்து காரின் ஜன்னல் வழியாக செங்கல் வீசப்பட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

சீனாவில் பதிவு செய்யப்பட்ட பியூச்சர் டெக்னாலஜி டிவைசஸ் இன்டர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சிப் நிறுவனமான எஃப்டிடிஐயின் 80.2% பங்குகளை தேசிய பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக விற்க பிரிட்டிஷ் அரசாங்கம் புதன்கிழமை உத்தரவிட்டது.”எப்டிஐடிஹெச்எல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எஃப்டிடிஐயில் 80.2% விற்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்” என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த சொத்துக்கள் இங்கிலாந்து தேசிய பாதுகாப்பிற்கு முரணான வழிகளில் பயன்படுத்தப்படலாம் என்று அரசாங்கம் கவலைப்பட்டத்திற்கு காரணமாக விற்க முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் குறைந்தது 217 பேரைக் அழித்த வெள்ளம், வணிகங்கள் மற்றும் வீடுகளையும் விட்டு வைக்க வில்லை , திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஸ்பெயின் 10.6 பில்லியன் யூரோ ($11.4 பில்லியன்) நிவாரண தொகை அறிவித்துள்ளது. பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் ஃப்ரீலான்ஸ் தொழிலாளர்களுக்கு 838 மில்லியன் யூரோக்கள் ($ 902 மில்லியன்) இந்த தொகையில் உள்ளடம் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று தெரிவித்தார்.

டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்

“வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றி” என்று டொனால்ட் டிரம்ப்பை வாழ்த்திய அடுத்த உலகத் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் ஆவார்.

“எதிர்வரும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்,” என்று இங்கிலாந்து பிரதமர் கூறுகிறார்:

“கூட்டாளிகளுக்கு மிக நெருக்கமானவர்களாக, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களின் பகிரப்பட்ட மதிப்புகளைப் பாதுகாப்பதில் தோளோடு தோள் நிற்கிறோம்.

“வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிலிருந்து புதுமை மற்றும் தொழில்நுட்பம் வரை, UK-US சிறப்பு உறவு அட்லாண்டிக்கின் இருபுறமும் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து செழிப்பாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.”

 

வரலாற்றின் மிகச்சிறந்த மறுபிரவேசத்திற்கு’ ட்ரம்பை வாழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர்

தற்போது இந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு உலகத் தலைவர்கள் சிலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“வரலாற்றின் மிகப்பெரிய மறுபிரவேசத்திற்கு வாழ்த்துகள்! வெள்ளை மாளிகைக்கு உங்கள் வரலாற்றுத் திருப்பம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியை வழங்குகிறது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார்: “இது ஒரு பெரிய வெற்றி!”

மேலும் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் இதைப் போன்றே கூறுகிறார்: “அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுபிரவேசம்! ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள். உலகிற்கு மிகவும் தேவையான வெற்றி!”

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 05-11-2024

TVK கட்சியின் மீது பரபரப்பு புகார் கொடுத்த டிரைவர் மணிகண்டன்