in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-10-2024


Watch – YouTube Click

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-10-2024

மால்டோவா…வில் நடைபெற்ற election.. முடிவுகள் .திங்கட்கிழமை காலை கிட்டதட்ட 98% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக 49.92% வாக்குகள் பதிவாகியுள்ளது.இன்னும் எண்ணப்பட வேண்டிய பல வாக்குகள் வெளிநாட்டில் பதிவாகிவிட்டது. மால்டோவன் புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான உறவுகளுக்கு ஆதரவாக இருப்பதால் ஐரோப்பியாவுடன் சாய்ந்துவிடலாம் என்றும் மோல்டோவன் ஊடகங்கள் தெரிவித்தன.

கத்தி முனையில் வாக்களித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ருமேனியா மற்றும் உக்ரைன் எல்லையில் உள்ள 2.6 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டிலும் வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய EU-சார்பு ஜனாதிபதியான Maia Sandu, மால்டோவன் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டின் விளைவாக வாக்குகள் சிதறிவிட்டது .இது “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று அவர் கூறினார், ரஷ்யா மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுக்க பட்டது என்றும் குற்றச்சாட்டினார்

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீதான பட்ஜெட் வரி சோதனையை நிராகரித்த அமைச்சர் .அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது பட்ஜெட் வரி.”உழைக்கும் மக்கள்” மீதான வரிகளை அதிகரிக்க மாட்டோம் என்று தொழிற்கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது.

ஹெல்த் செக்ரட்டரி வெஸ் ஸ்ட்ரீடிங் நேற்று அதிக வருமானம் ஈட்டுபவர்களை பட்ஜெட்டில் சலுகையை எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரித்ததை அடுத்து, அது “குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ளவர்கள்” மீது கவனம் செலுத்துவதற்கும் பரிந்துரைத்தார். உழைக்கும் மக்கள் மீது தேசியக் காப்பீடு, வருமான வரி அல்லது VAT ஆகியவற்றை உயர்த்த மாட்டோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கை முற்றிலும் தெளிவாகக் கூறியுள்ளது, அதுதான் உறுதிமொழியாக வழங்கப்படும். என்று chancellor கூறியுள்ளார்

கிழக்கு லண்டனில் உள்ள பிளாஸ்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது, சுமார் 30 பேர் வெளியேற்றப்பட்டனர். குயின்ஸ் ரோடு மேற்கு பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று லண்டன் தீயணைப்புப் படை (LFB) கூறியது. 15 மாடிகள் கொண்ட ஒரு பிளாக்கில் 10-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக LFB தெரிவித்துள்ளது.

11, 12 ஆகிய தளத்தில் உள்ள பால்கனிகள், அழிக்கப்பட்டன. , 13வது மற்றும் 14வது தளங்களும் பலத்த சேதம் அடைந்தன.” லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று LFB கூறியது..” சம்பவ இடத்தில் ஈஸ்ட் ஹாம், பிளாஸ்டோவ், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படையினரைக் கொண்டு, காலை 9.03 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது

உயிர் இனங்கள் வீழ்ச்சியைச் சமாளிக்க இங்கிலாந்து முதல் இயற்கை தூதரை நியமித்தது. ரூத் டேவிஸ் இயற்கையின் சிறப்புப் பிரதிநிதியாக, இயற்கைக்கான இங்கிலாந்தின் முதல் தூதரை அரசாங்கம் நியமித்துள்ளது, அவர் உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுப்பதில் உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்கியதது. இயற்கைக்கான புதிய சிறப்புப் பிரதிநிதி ரூத் டேவிஸ், தற்போது பேச்சுவார்த்தைக்காக கொலம்பியா சென்றிருக்கிறார். கடந்த காலங்களில் UK ..வில் 2021 இல் கிளாஸ்கோவில் நடத்தப்பட்ட UN Cop26 காலநிலை உச்சிமாநாட்டின் முக்கிய விளைவுகளில் ஒன்றான காடழிப்பு குறித்த உலகளாவிய உறுதிமொழியை உருவாக்க டேவிஸ் சிறப்பாக உதவினார்


Watch – YouTube Click

What do you think?

மாணவ மாணவியருக்கு இடைஞ்சலாக கட்டப்படும் கட்டிடம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்ட அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு