in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 22.11.2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 22.11.2024

அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப பதுங்கு குழி வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள். ரஷ்யா மேற்கத்திய நாடுகளை அணுசக்தி பேரழிவு மூலம் அச்சுறுத்துவதால், உலகெங்கிலும் உள்ள நாடுகள் மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகி வருகின்றன, பயந்துபோன பிரிட்டன் தேசம், தாக்கப்பட்டால் தங்களை மறைப்பதற்குத் துடிக்கிறார்கள் அதனால் அந்நாட்டில் அணுசக்தி பதுங்கு குழிகளின் தேவை அதிகரித்து வருகிறது. நாட்டிங்ஹாம்ஷைரில் வாழும் மேத்யூ பிரைட் என்பவர், பங்கர்(bunker) என்னும் பாதுகாப்புப் பேழைகளை உருவாக்குபவர்., அணுகுண்டு வீசப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்காக, பிரித்தானியர்கள் பதுங்கு குழி வாங்க கூட்டம் அலைமோதுவதாக மேத்யூ. கூறினார்

மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மக்கள் வரி பணத்தில் இருந்து 72 மில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை (DCMS) மூலம் வெறும் 50 மில்லியன் பவுண்டுகள் செலவழிக்கப்பட்டது, அதே சமயம் காவல் துறை செலவுகள் கிட்டத்தட்ட £22m ஆக இருந்தது, இது உள்துறை அலுவலகத்தால் செலுத்தப்பட்டது.. மே 2023 இல் நடந்த முடிசூட்டு விழா ” விவகாரம்” தற்போது தெரியவந்துள்ளதால் பிரித்தானிய மக்கள் கொந்தளிகிரார்கள்.. பள்ளிப்பிள்ளைகளுக்கு உணவு கிடைக்காத நிலையில் மன்னர் முடிசூட்டு விழாவுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே விருந்தினர் பட்டியலில் 1953 இல் ராணி எலிசபெத் II இன் முடிசூட்டு விழாவிற்கு இதில் கால் பகுதி மட்டுமே செலவானதாக குறிப்பிடப் பட்டுள்ளது

லாவோஸில் மெத்தனால் விஷத்தால் இறந்த ஆறு பேரில் பிரிட்டிஷ் வழக்கறிஞரும் ஒருவர். வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) “லாவோஸில் இறந்த ஒரு பிரிட்டிஷ் பெண்ணின் குடும்பத்தை ஆதரிப்பதாக கூறியது., கடந்த வாரம் வாங் வியெங்கின் நகரத்தில் ஆபத்தான மெத்தனால் கொண்ட மதுபானங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். ஆறு பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு தற்போது சிகிச்சையில் உள்ளனர்

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 63 நாயன்மார்களின் சிறிய ரகத் தேர்தல் பழுது பார்த்து வர்ணம் தீட்டும் பணி