ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 23-10-2024
சிட்னியில் மன்னர் சார்லஸ் ராணி கமிலாவை பார்ப்பதர்க்காகஐந்து மணிநேரம் காத்திருந்த மக்கள் . 75 வயதான சார்லஸ், சிட்னி ஓபரா ஹவுஸ் அருகே வெயிலில் தனகாக காத்திருந்த பெரும் கூட்டத்திடம் மன்னிப்பு கேட்டார். 10,000 க்கும் அதிகமானோர் வருகை தந்தனர் – எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். மக்கள் கங்காரு பொம்மைகள், ஆஸ்திரேலிய கொடிகள் மற்றும் பூங்கொத்துகள் மன்னருக்கு கொடுத்தனர்.. 71 வயதான மிலா க்ரோஸ் கலிகா, பிலிப்பைன்ஸில் இருந்து மன்னரைப் பார்ப்பதற்காக விமானத்தில் வந்தவர் சார்லஸ் மற்றும் கமிலாவை சந்தித்த ஆஸ்திரேலியர்களில் மிலாவும் ஒருவர்.
புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, தேசிய லாட்டரியில் £500,000 வென்ற பிறகு lucky மன்னன்’, “.கிரேட் யார்மவுத், நோர்போக்கைச் சேர்ந்த ஜான் லிங்கார்ட், 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட லாட்டரி விளையாட்டால் தற்போது பயனடைந்து இருக்கிறார் .66 வயதான கணினி பொறியாளருக்கு புற்றுநோய் பரவியதால் சிறுநீரகத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது -.திரு லிங்கார்ட் செப்டம்பர் 25 அன்று தண்டர்பால் டிராவிற்கான டிக்கெட்டை வாங்கினார், அதற்கு மறுநாள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு தானியங்கி செய்தியில் ஜானுக்கு லொட்டரிச்சீட்டில் 500,000 பவுண்டுகளும், மற்றொரு சீட்டில் 10 பவுண்டுகளும் பரிசு விழுந்துள்ளது என்றிருந்தது . இந்த மழ்ச்சியை கொண்டாட ஜான் மீண்டும் Tenerife தீவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே விடுமுறைக்காக போர்ச்சுகலின் மெலிடெஸில் ஒரு வீடு வாங்கியது புதிய சர்ச்சை ஏற்படுத்தியதற்கு காரணம்அந்நாட்டில் ஹரியின் சித்தப்பா மகளான யூஜீனிக்கும் வீடு உள்ளது. அங்கு தங்க ஹாரி விசா வாங்கவும் வாய்ப்புள்ளது. அரச தம்பதிகள் அண்டை வீட்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரபரப்பாகத் தோன்றினாலும், மெலிட்ஸில் வசிப்பவர்கள் அவர்களின் வருகையைப் பற்றிய செய்தியால் குழப்பமடையவில்லை. ‘ஹாம்ப்டன்ஸ் ஆஃப் ஐரோப்பா’ என்ற பகுதி, விடுமுறை இல்லங்களைத் தேடும் ஏ-லிஸ்டர்களின் பிரபலமான இடம் அதனால் இவர்களும் visitors தான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 89 ஈழத்தமிழர்கள் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தென்னிந்தியா வழியாக இலங்கையை விட்டு வெளியேறினர்., கடல் மார்க்கமாக செல்லத் படகில் கனடாவை நோக்கி அவர்கள் சென்றனர். கடல்கடந்து செல்ல 30 நாட்கள் ஆகும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.கடலில் 11 நாட்களுக்குப் பிறகு, அவர்களின் மோட்டார் வேலை செய்யவில்லை, அவர்கள் மீட்கப்பட்டு சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா என்ற தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவுக்கூட்டம் எஞ்சியிருக்கும் சில பிரிட்டிஷ் காலனித்துவ பிரதேசங்களில் ஒன்றாகும் புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானியா நடவடிக்கைகள். எடுத்து வருகிறது. அடைக்கலம் தேடி வந்தவர்களின் மனித உரிமைகளை பிரித்தானியா மீறுவதாகக் பிரிட்டன் அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது