ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 23.11.2024
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலதிபரும் பணக்காரரும் மான கௌதம் அதானி உலகின் பல்வேறு நாடுகளில் முதலிடு செய்துள்ளார் . ஆந்திரா,ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ,தமிழகம் சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்களில் மின்சாரம் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக 2000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க சட்டத்துக்கு எதிரான இந்த முதலீட்டால் தொழிலதிபர் மீது நியூயார்க் நீதி துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதனால் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவு பாதிக்காது என்று வெள்ளை மாளிகை அறிக்கைவிடுத்துள்ளது
நெதன்யாகு பிரித்தானியாவில் கைதாவது உறுதி. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழன் அன்று பெஞ்சமின் நேதன்யாகு மீது போர்க்குற்றங்கள் மற்றும் காசாவில் மனிதகுலத்திற்கு எதிராக நடந்த போர் குற்றங்களுக்காக கைது வாரண்ட் பிறப்பித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் மண்ணுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ,உக்ரைன் படையெடுப்பிற்கு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார், உலக அரங்கில் அவரை தனிமைப்படுத்த அமெரிக்கா வின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்பதற்கான மிக சிறந்த சான்று இது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான பயணத்திற்கான தேதிகள் முடிவாகாத நிலையில் , “.”பிரதமர் மோடியின் இரண்டு முறை ரஷ்யா பயணங்களுக்குப் பிறகு, அதிபர் புடின் இந்தியாவிற்கு வருகைதற உள்ளார். என்று பெஸ்கோவ் கூறினார். ” இது ஒரு புறம் இருக்க’ பிரிட்டன் தனது உலகளாவிய உறவுகளை வலுப்படுத்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டங்கலும் உள்ளன. . புற்றுநோயிலிருந்து மீண்டவர் பல நாடுகலூக்கு பயணம் செய்யும் நிலையில் இந்த விஜயம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது . ஆனால் ரஷ்யாவின், உக்ரைனைக்கு எதிரான போருக்கு பிரித்தானியா எதிராக இருக்கிறது, இந்தியாவோ, புடினுடன் சமரசமாக இருக்கும் போது சார்லஸ் இந்திய பயணம் பயனளிக்குமா? என்ற கேள்வி எழுகிரது
லண்டன் விமான நிலையதில் மர்ம பொருள் அடங்கிய மூட்டை கண்டுபிடிப்பு. லண்டனில் சிறிய வெடிபொருட்கள் இருப்பதற்கான அறிகுரியுடன் மூன்று அஞ்சல் பைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் பை ஹீத்ரோவுக்கு அருகிலுள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக தொகுப்பின் ஒரு பகுதி எரிந்தது. இரண்டாவது பை, பரபரப்பான வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, மூன்றாவது நியூஹாமில் உள்ள லண்டன் நகர விமான நிலையத்தில் உள்ள சிட்டி ஏவியேஷன் ஹவுஸில் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை..