ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 25-09-2024
உக்ரைனின் வெற்றித் திட்டத்தை ஆதரிக்க ஜெலென்ஸ்கி ஜோ பிடனைப் சந்திக்கிறார், உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வியாழன் அன்று ஜனாதிபதி ஜோ பிடனுக்கு “வெற்றித் திட்டத்தை” வெளிப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், இராணுவம், நிதி உதவி மற்றும் எதிர்கால பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான வேண்டுகோள்களாக இருக்கக்கூடும்.ஜெலென்ஸ்கி கூறுகையில், இது போரை நிறுத்துவதற்கான ஒரு “பாலமாக” வடிவமைக்கப்பட்டுள்ளது, மக்கள் நினைப்பதை விட விரைவில் இந்த போர் முடிவடையும் என்று நம்புகிறேன் என்றார்
மத்திய ஐரோப்பாவின் பேரழிவுகரமான வெள்ளம் காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமாகிவிட்டது .உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டத்தின் எதிர்காலத்தை இந்த வெள்ளம் தெளிவாக அறிவுறுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போரிஸ் புயல், போலந்து, செக் குடியரசு, ருமேனியா, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளை அழித்துவிட்டது. குறைந்த பட்சம் பில்லியன் பவுண்டுகள் சேதம் அடைந்துள்ளது. உலக வானிலை அட்ரிபியூஷன் (WWA) குழு சமீபத்திய பதிவின் படி வரலாறு காணாத மழை என்று கூறியது
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்யா தாக்கியதில் மூன்று பேர் மறித்தனர், மற்றும் 31 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு கட்டிடம், ஒரு பேக்கரி, ஒரு மைதானம்… அதாவது சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கை தான் ரஷ்ய குண்டுகளின் இலக்குகள் ” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.ரஷ்ய துருப்புக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட வுஹ்லேதார் நகரத்தை சுற்றி வளைத்து மூடுவதன் மூலம் சண்டை தீவிரமடைந்துள்ளது
இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே போர் தீவிரமடைந்ததை அடுத்து, லெபனானில் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகளை “உடனடியாக வெளியேறுங்கள்” என்று பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் (MoD) லெபனானில் இருந்து பிரிட்டிஷ் நாட்டினரை வெளியேற்றுவதற்குத் தயாராக 700 துருப்புக்களை அருகிலுள்ள சைப்ரஸுக்கு அனுப்புகிறது