ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 28.11.2024
இளவரசு ஹரி மற்றும் மேகன் தம்பதியரை நாடு கடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அமெரிக்க அதிபரை எதிர்க்க இவர்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். ஹரி தனது சுயசரிதையில் தனக்கு போதைப் பழக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் அமெரிக்கா விசா எடுக்கும் விண்ணப்பத்தில் பொய் கூறியிருப்பதாக இவர் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பார்வையிட வேண்டும் என்று ஹெரிடேஜ் பவுண்டேஷன் அமைப்பு முறையீடு செய்துள்ளது. மேகன் ஒரு அமெரிக்க குடிமகள் அவர்களது குழந்தைகளும் அமெரிக்காவில் தற்பொழுது படிக்கும் நிலையில் தங்களை ட்ரம்ப் வெளியேற்ற நினைத்தால் சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுக தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் அதிபருக்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது அதிபரின் பதவிக்காலம் முடியும் நிலையில் ஆளும் கட்சியின் சார்பாக பிரதமர் மார்ஷல் சியோலாகு மற்றும் வலதுசாரி தேசிய வாத கூட்டணியைச் சேர்ந்த ஜார்ஜசிமியோன் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள். இந்த தேர்தலில் களமிறங்க உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை எனில் இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு மறுபடியும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று யார் பெரும்பான்மையான வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர் வரும் எட்டாம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் அருகே உள்ள இஸ்லா புட்டிங் பாடோ என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். திடீரென்று ஒரு குடிசை தீப்பற்றி எறிய சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளும் மளமளவென தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆயின மீட்பு பணியினர். வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்கள் உடமைகளை இறந்து தவிக்கின்றனர். தற்காலிகமாக இவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் சரம் மாறி தாக்குதல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது இருவருக்கும் ஓர் ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினரூக் கு லெபனானில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ஆதரவாக செயல்பட்டு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலை நடத்தியதால் கோபம் அடைந்த இஸ்ரேல் நேற்று லெபனான் முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிர் மறைந்தது 66க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளது லெபனான்
பிரிட்டானியா அமைச்சர்கள் ஆன Angela Rayner, Yvettecooper ,Rachel Reeves உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் ரஷ்யாவுக்குள் உடைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் வர்த்தகம் ராணுவம் மற்றும் மீடியாவை சேர்ந்த 10 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய அனுமதி இல்லை இந்த மோதலின் வெளிப்பாட்டிற்கான காரணம் பிரிட்டானியா ஏவுகணைகளையும் ரஷ்யாவுக்குள் பிரிட்டன் அனுமதித்ததால் இந்த பூசல் ஏற்பட்டது.