in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 08.11.2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 08-11-2024

டொனால்ட் டிரம்ப்..பை பற்றி கடந்த காலத்தில் மக்கள் கூறிய விஷயங்களை மறந்து “கடந்த காலத்தைப் பார்க்கும் திறன் கொண்டவர்” என்று கெய்ர் ஸ்டார்மரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் கூறியுள்ளார். மூத்த தொழிற்கட்சி அமைச்சர்கள் டிரம்பை விமர்சித்த வரலாறு இருந்தபோதிலும் , டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் “நன்றாக இருக்கும்” என்று தான் நினைத்ததாக கேபினட் அலுவலக அமைச்சரான பாட் மெக்ஃபேடன் தடாலடியாக கூறினார். வெளியுறவு செயலாளரான டேவிட் லாமி, 2018 ஆம் ஆண்டில் உறுப்பினராக இருந்தபோது, டிரம்ப் “பெண்களை வெறுப்பவர், சமூகவிரோதி” மற்றும் “சர்வதேச ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்” என்று கூறியதை மறந்து விட்டார் போலும்

மவுண்ட் புஜியின் சின்னமான ஸ்னோகேப்(snowcap) வரலாற்றில் முதல் முறையாக பனி இல்லாமல் தோன்றியது.புதன்கிழமை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களால் பகிரப்பட்ட புகைப்படங்கலில் ஜப்பானின் மிக உயரமான சிகரத்தில் லேசான தூசி படிந்ததைக் போல் காட்டியது.130 ஆண்டுகளில் நவம்பர் தொடக்கத்தில் புஜி பனியின்றி இருப்பது இதுவே முதல் முறை. 3,776 மீ உயரமுள்ள இந்த சிகரம் கோடைக்கால பயணம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு பொதுவாக பனி பொழியும். ஆனால் இந்த முறை பனி பொழிவு இல்லாமல் காணப்பட்டது . இலையுதிர் கால தாமததினால் ஜப்பானின் அதிகபட்ச வெப்பமான கோடைகாலம் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது

வட கொரியா தனது போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக துருப்புக்களை அனுப்பியதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவதை தென் கொரியா நிராகரிக்கவில்லை என்று ஜனாதிபதி யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார். ஆயுத ஏற்றுமதியில் முக்கிய நாடான தென் கொரியா, மோதலில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது.”இப்போது, வட கொரிய படிப்படியாக தனது கொள்கையை தளர்த்திவருகிறது ” என்று யூன் கூறினார்.”ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை என்பதே இதன் பொருள்.”என்று சூசகமாக கூறினார்

2018 ஆம் ஆண்டு சாலிஸ்பரியில் நடந்த நோவிச்சோக் தாக்குதலின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டிய வாக்னர் கூலிப்படை குழுவுடன் தொடர்புடைய நாட்டவர்கள் மற்றும் ஒரு இராணுவ அதிகாரி உட்பட ரஷ்யா மீது 46 புதிய தடைகளை விதிப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் வியாழனன்று கூறியது.முன்னாள் இரட்டை முகவர் செர்ஜி ஸ்கிரிபால் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக பிரிட்டிஷ் பொலிசார் குற்றம் சாட்டிய டெனிஸ் செர்ஜிவ்வை இலக்கு வைத்து இரசாயன ஆயுதத் தடைகள் ஆட்சியின் கீழ் ஒரு புதிய பெயரைச் சேர்த்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

What do you think?

வலியை..இப்போ நினைச்சாலும் நடுங்குகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புதியதாக புனரமைக்கப்பட்ட மரத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாட வீதியில் வெள்ளோட்டம்