in

அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

மீனவர் பிரச்சினை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை சொல்லித்தர தேவையில்லை, இங்கு அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில்

இதே போன்றுதான் போன முறை சென்னையில் வெள்ளம் வந்த போது கொடுத்த நிவாரணத்தொகை 5000 கோடி என்ன ஆனது என்று மத்திய நிதி அமைச்சர் கேட்டார்கள் ஆனால் அவர்கள் என் எந்த திட்டப் பணியில் முடிக்கவில்லை

இப்படிதான் இவர்கள் சொல்வதை நம்பி மக்கள் வெள்ளத்தில் வீதியில் நின்றார்கள் தூத்துக்குடியில் நிறைய பேர் உயிர் பறிபோனது
அதற்கெல்லாம் முறையாக நிவாரணம் கூட வழங்கவில்லை கேட்டால் மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்

மத்திய அரசு கொடுப்பதற்கு முன்பாகவே மாநில அரசு நிதியிலே கொடுப்பதற்கு வழி வகைகள் உள்ளது முன்னுதாரணம் இருக்கிறது

இன்றைக்கு திவாலான அரசு தான் திமுக அரசு இருக்கிறது
இதன் உண்மை நிலையை மு.க.ஸ்டாலின் தான் மக்களுக்கு கூற வேண்டும்

பேரிடர் நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடக்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. நிவாரணம் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரக்கூடியது இதில் பாரபட்சம் காட்டக்கூடாது,

ஒன்றிய அரசு பத்தாண்டுகளுக்கு பின்பு கச்சத்தீவு பற்றி தற்போது பேசுகிறார்கள், அண்ணாமலை மீனவர் பிரச்சனைக்கு மீனவ சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லாத யாரையோ அழைத்துச் சென்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சரிடம் பொக்கே கொடுத்து வருகிறார். அவருடன் சம்பந்தம் பேசவா போகிறார்.
உயிர் போற பிரச்சினை, நிவாரணம் கேட்க வேண்டியது எப்படி அந்த அணுகுமுறை இருக்கிறது.

நான் அமைச்சர் ஜெய்சங்கரை குறை சொல்லவில்லை, வெளியூறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அத்துறையின் செயலாளராக இருந்து பிரதமருடைய நம்பிக்கை பெற்று தற்போது அமைச்சராக வந்துள்ளார். அவர் மக்களை சந்தித்து வந்தாரோ, அல்லது பிரதமரை சந்தித்து வந்தாரா என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் வெளியுறவு பிரச்சனைகளை குறித்து ஜெய்சங்கர் தெளிவாக அறிவார், அவருக்கு அண்ணாமலை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பிரதமருக்கு வெளி நாடு சுற்றுப்பயண திட்டத்தை திறம்பட வகுத்துக் கொடுத்ததற்கான பரிசு தான் அவருக்கான இந்த அமைச்சர் பதவி. அண்ணாமலை பொக்கே கொடுத்து மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை குறித்து சொல்லத் தேவையில்லை.

ஒன்றிய அரசு கட்சத்தீவு பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதை தமிழக மீனவர்கள் ஏற்க மாட்டார்கள், குஜராத் மீனவர்கள் என்றால் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள், இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவாக நின்றது இந்தியா தான், ஆனால் இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போகும் போது தாக்கப்படுவது சகித்துக் கொள்ள முடியாது, இந்த அநிதியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த திமுக ஆட்சியில் அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பில்லை அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை சாமானியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார்.

What do you think?

 ஸ்ரீ ஐந்துமுளி சுவாமி ஆடித்திருவிழா கறி சமைத்து சாமி தரிசனம்

மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் ஸ்ரீமதி அபராஜிமதுரையில் தா சாரங்கி பேட்டி