in

வேதாரண்யம் அருகே பள்ளி கூட கட்டிடத்தை நிர்வாகி இரவோடு இரவாக இடித்ததால் பரபரப்பு

வேதாரண்யம் அருகே பள்ளி கூட கட்டிடத்தை நிர்வாகி இரவோடு இரவாக இடித்ததால் பரபரப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி கிராமத்தில் சரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.

இந்த பள்ளியில் 15 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பள்ளியின் நிர்வாகியும், பள்ளியின் தலைமையாசிரியருமமான ரகுபதி மற்றும் ஆசிரியர் கோதண்டபாணி ஆகிய இருவரும் பள்ளியில் பணியாற்றி வந்தனர்.

இந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
கடந்த மே மாதம் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு டீ.சி (TC) யை கொடுத்து பள்ளியை பூட்டி விட்டு தலைமை ஆசிரியர் ரகுபதி ஓய்வு பெற்று விட்டார்.

பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் சிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பள்ளிக்கு அருகே உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக கடந்த 10 ஆம் தேதி முதல் பள்ளி செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி கிடந்த பள்ளியை திறந்து செயல்பட வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் நிர்வாகி ரகுபதி பள்ளியின் ஓட்டு கட்டிடத்தை ஜேசிபி கொண்டு இடித்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரை ஏற்று வேதாரண்யம் போலீசார் பள்ளியின் நிர்வாகி ரகுபதியை தேடி வருகின்றனர்.

பள்ளி வழக்கம் போல் அருகே உள்ள சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் பணியாற்றிய தலமையாசிரியரே ஒரு பள்ளிக்கூடத்தை இடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

புகையும் நயன்தாரா… எறங்கி அடிக்கும் சமந்தா

 திமுக அரசை எதிர்த்து தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்