அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய உணவு
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய உணவு.. 14 ஆம் தேதி மாலை துவக்கம்... கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.
புதுச்சேரி புராணசிங்கப் பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று துவக்கி வைத்தார்.
அப்பொழுது மாணவர் மத்தியில் பேசிய அவர், இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மாலையில் வீட்டுக்கு செல்லும்போது களைப்புடன் செல்லாமல் உற்சாகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறுதானிய உணவுகளை(Snacks) வழங்க இருக்கிறோம்..
வரும் 14ஆம் தேதி முதல் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட இருக்கிறது. இதனை துணைநிலைஆளுநர், முதல்வர் ஆகியோர் துவக்கி வைக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் பஜக நிர்வாகிகள் வீரராகவன் தமிழ்மணி கண்ணன் கலியபெருமாள் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.