in

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எண்ணம் இருக்கும் – விஜய் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் – ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எண்ணம் இருக்கும் – விஜய் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மருது சகோதரர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாநகர அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மருத்துவர் சரவணன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு கூறுகையில்

மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய நாள் எது அதிமுக சார்பில் இன்று வீரவணக்கம் செலுத்தியுள்ளோம்

தொடர்ந்து மருது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய ஒரே இயக்கம் என்றால் அது அதிமுக தான்

அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தான் மருது சகோதரர்களுடைய நினைவு தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது

தற்போது யார் வேண்டுமானாலும் செய்தித்தாள் வெளியிடுகிறார்கள் ஆனால் அன்றைய தினமே தமுக்கம் கலையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக விழா எழுப்பி மருது சகோதரர்களுக்கு ஸ்டாம்ப் வெளியிட்டது அதிமுக தான்

தேசியமும் தெய்வீகமும் எனப் போற்றக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு 13.5 கிலோ தங்க கவசம் வழங்கியது அதிமுக தான்

அதிமுக பொருளாளர் கையொப்பமிட்டு எடுத்து வழங்கக்கூடிய ஒரு நிலையை அம்மா அவர்கள் உருவாக்கினார்கள்

பசும்பொன் பகுதியில் தேவைப்படக்கூடிய அனைத்து தேவைகளையும் அதிமுக காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது

அதேபோன்று வ உ சிதம்பரனார் மற்றும் கட்டபொம்மன் ஆகிய தலைவர்களுடைய சிலைகளுக்கு தேவைப்படக்கூடிய அனைத்து பணிகளையும் அதிமுக காலகட்டத்தில் செய்தோம்

திமுக கலைஞருக்கு மட்டும்தான் விழா கொண்டாடி வருகிறது

மறைந்த பின்னாடி பாடகர் டி எம் சௌந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நான் பலமுறை கூறி இருந்தேன் ஆனால் முனிச்சாலை பகுதியில் சிலைகள் மட்டும்தான் அமைத்திருக்கிறார்கள் மணிமண்டபம் கட்டவில்லை

மூக்கையா தேவர் அவர்களுக்கு அவர் பிறந்த ஊரான பாப்பம்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என்று பலமுறை கடிதம் எழுதி இருக்கின்றேன் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பும் கொண்டு வந்திருக்கின்றேன்

விவசாயிகளின் நாயகனாக இருக்கக்கூடிய பென்னிகுவிக் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டியது அம்மா அவர்கள் தான்

தங்க கவசம் எங்களுக்குத் தான் சொந்தம் என்று ஓபிஎஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு ??

சும்மா சொல்லிக்கொள்ள வேண்டியது தான் அதெல்லாம் கிடையாது

அதிமுகவைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் இஸ்லாமியர்களுக்கு மெக்கா என்பது போல எங்களுக்கெல்லாம் அவ்வை சாலையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகம் தான்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாகவே அதிமுக காலகட்டத்தில் தூர்வாரப்பட்டதை போல அனைத்து நீர்வழி வாய்க்கால்களும் தூர்வாரப்பட வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம்

ஆனால் முறையாக தூர்வாரப்படாததன் காரணமாக தற்போது செல்லூர் கண்மாயிலிருந்து வைகை நோக்கி செல்லக்கூடிய பந்தல்குடி வாய்க்கால் வழியாக நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லக்கூடிய ஒரு நிலை இருந்து வருகிறது

சுமார் 84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை

அதேபோன்று விளாங்குடி முதல் கூடல் நகர் வரை குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் செல்லக்கூடிய நிலையில் பொதுப்பணித்துறை இடமும் தெரிவித்திருக்கின்றோம் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன ஆனால் பணிகள் நடைபெறவில்லை

குறிப்பாக நீர்நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது

1993 மதுரை வைகை மிகப்பெரிய வெல்லம் வந்தது ஆனால் செல்லூர் பகுதிகளுக்கு இல்லை

அன்றைய தினம் அம்மா அவர்களுடைய ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு

பலமுறை மாநகராட்சி இடமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் நாங்கள் முறையிட்டிருக்கின்றோம்.

குறிப்பாக நேற்றைய தினம் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் எம்எல்ஏ தளபதியிடம் பொதுமக்கள் முறையிட்டு இருக்கிறார்கள் அவரும் அவர்களுக்கு தேவைப்படக்கூடிய உணவு உள்ளிட்டவைகளை உடனடியாக ஏற்பாடு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று கூறியிருக்கிறார் இது வேதனை படக்கூடிய ஒரு விஷயம்

நடிகர் விஜய் உடைய மாநாட்டில் காமராஜர் பெரியார் அம்பேத்கர் ஆகியோரின் கட்டமைப்புகள் வைத்திருப்பது பற்றிய கேள்விக்கு ??

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும் ஜனநாயகத்தின் யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம் என எடப்பாடி அவர்களே கூறி இருக்கிறார்

இது அந்தந்த கட்சித் தலைவர்களுடைய விருப்பம் என்று தெரிவித்துவிட்டு சிவகங்கை நோக்கி மருது சகோதரர்களின் சிலைக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டார்

What do you think?

அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும்” என துணை மேயர் நாகராஜன் பேட்டி,