in

மதுபான கடைகளின் விற்பனை நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற கலால் துறை


Watch – YouTube Click

மதுபான கடைகளின் விற்பனை நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற கலால் துறை

 

புதுச்சேரியில் மதுபான கடைகளின் விற்பனை நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற கலால் துறை தேர்தல் துறைக்கு கோப்பு அனுப்பி உள்ளது.

புதுச்சேரியில் மதுபான கடைகள் காலை 8:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11:00 மணி வரை விற்பனை நடக்கும். சுற்றுலா பிரிவின் கீழ் உள்ள மதுபான கடைகள் நள்ளிரவு 12 மணி வரை மது விநியோகம் செய்வர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மதுபான கடைகள் இரவு 10:00 மணிக்கு மூட தேர்தல் துறை உத்தரவிட்டது. ஆனால், இரவு 9:30 மணிக்கே மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் வழக்கமான வியாபாரம் நடைபெறவில்லை என மதுபான கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19 ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பறக்கும்படைகள், சோதனைச்சாவடி கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டது. ஆனால், மதுபான கடை விற்பனை நேரம் குறைப்பு ரத்து செய்யப்படவில்லை. புதுச்சேரி வருவாயில் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வரிக்கு தனி இடம் உண்டு.

இதனால் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை பழையப்படி அறிவிக்கவும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற தேர்தல் துறைக்கு கலால் துறை கோப்பு அனுப்பி உள்ளது. ஓரிரு நாட்களில் கோரிக்கை மீது பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

Web சீரியஸ் ஷூட்டிங்…கிற்கு புதுச்சேரி வந்த சத்ய ராஜ்

பாரதி பூங்கா எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி