in

கூடுதல் வீரியம் உள்ள சாராயத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலால் துறை


Watch – YouTube Click

கூடுதல் வீரியம் உள்ள சாராயத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலால் துறை

 

புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தனி நபருக்கு சாராயம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி கலால்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்

இதுகுறித்து கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியில் சிலர் சமீப காலமாக புதுச்சேரியில் இருந்து வாங்கிச் சென்ற சாராயத்தை அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளது.

எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயக்கடைகளில் புதுச்சேரி அரசின் வடி சாராய ஆலையில் இருந்து வழங்கப்பட்ட சாராயம் மட்டுமே விற்கப்படுகிறதா என்று கண்காணிக்கவும் மேலும் அதன் வீரியத்தை ஆய்வு செய்யவும் மற்றும் சாராயத்தில் வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கவும் கலால் ஆணையரின் உத்தரவுப்படி தாசில்தார், சிலம்பரசன், ஆய்வாளர் அறிவுச்செல்வன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பாகூர், நெட்டப்பாக்கம், மற்றும் வில்லியனூர் கொம்யூன் பகுதிகளில் உள்ள சாராய கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகள் மூலம் தமிழக பகுதிகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தனி நபருக்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று சாராயக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்டம் 1970-ன் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

மேலும் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகள், தமிழக பகுதிகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதை தடுக்க எல்லைப் பகுதியில் கண்காணிக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்….


Watch – YouTube Click

What do you think?

விமான நிலையத்தில் 2 பயணிகள் கடத்தி வந்த 1 கிலோ 42 கிராம் தங்கம் பறிமுதல்

பாஜக தலைமையே ஆளும் அரசில் குழப்பத்தை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளதா