in

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு என பிரத்தியேக பாடல் வெளியீடு


Watch – YouTube Click

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு என பிரத்தியேக பாடல் வெளியீடு

 

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு திருவிழா காலங்களில் பயன்படுத்துவதற்கு என பிரத்தியேக பாடல் வெளியீடு.

ஆனி தேர் பவனி என பெயரிடப்பட்டு பாடப்பட்ட பாடலின் இசைத்தட்டினை வேளாக்குறிச்சி ஆதீனம் வெளியிட கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா நடந்து வருகிறது.

ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் பிரத்தியேக பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்பட்டு வெளியிடப்பட்டு அந்த பாடல்கள் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கும் பிரத்தியேகமாக பாடல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் முடிவு செய்து நெல்லை சங்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயேந்திர பள்ளி மூலம் நெல்லையப்பர் கோவிலுக்கு என பிரத்தியேக பாடல் ஒன்றை உருவாக்க முடிவு செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி இசை ஆசிரியர் ஆகியோர் உதவியுடன் ஆனி தேர் பவனி என்ற பாடல் உருவாக்கப்பட்டது.

இதனை ஆனித் திருவிழா ஐந்தாம் திருநாளில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் வேளாக்குறிச்சி குருமகா சன்னிதானம் வெளியிட நெல்லையப்பர் திரு கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதனை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடிய இசை ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் விழா மேடையில் இந்த புதிதாக வெளியிடப்பட்ட பாடலை பாடினர்.


Watch – YouTube Click

What do you think?

வர்ற 24ம் தேதி தான் கடைசி, அமைச்சருக்கு கெடு விதித்த பாமக முக்கிய நிர்வாகி!

புதுச்சேரி 2024 25 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு 12,700 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது