in ,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து., இருவர் உடல் சிதறி பலி…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசன்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில்சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாகனத்தில் இருந்து பட்டாசு தயாரிக்க கூடிய கெமிக்கல் மருந்தை இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் புள்ளகுட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உடல்கள் ஏதும் கிடைக்கின்றனவா என்பது குறித்தும் மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்த ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.

உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் இருவர் இறந்த நிலையில் ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் போர் ஃமேன் பாலமுருகனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

What do you think?

புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

கல்லூரி மாணவ மாணவியர்கள் கூடுதல் பேருந்து இயக்க கோரி சாலை மறியலில்