in

மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் வண்டியை கடலூர் வரை நீடித்து இயக்கம்


Watch – YouTube Click

மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் வண்டியை கடலூர் வரை நீடித்து இயக்கம்

மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் வண்டியை கடலூர் வரை நீடித்து இயக்கம், காணொளி காட்சி வாயிலாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்த நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மைசூர் முதல் மயிலாடுதுறை வரை இயங்கி வந்த விரைவு வண்டியை கடலூர் துறைமுகம் வரை நீடித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது அதன் துவக்க விழா இன்று மயிலாடுதுறை ரயில்வே நடைமேடையில் நடைபெற்றது.

திருச்சி கோட்டை மேலாளர் எம் எஸ் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர்.சுதா மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து காணொளி காட்சி மூலமாக மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன் ரயிலை துவக்கி வைத்து நிலையில் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா கொடி அசைத்து கடலூருக்கு ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் இருந்து காலை 7:00 மணிக்கு கடலூர் புறப்படும் இந்த ரயில் காலை 8 மணி 35 நிமிடத்திற்கு சென்றடைகிறது. பிற்பகல் மூன்று மணி 40 நிமிடம் கடலூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு மாலை ஐந்து முப்பதுக்கு வருகை தந்து மயிலாடுதுறையில் இருந்து 5 மணி 55 நிமிடத்தில் வழக்கமான நேரத்தில் மைசூர் புறப்பட்டு செல்கிறது.

இதுபோல் மயிலாடுதுறையிலிருந்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் காலை 8 மணி 5 நிமிடத்திற்கு திருச்சி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு

சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் கேட் மூடல்