in

சட்டக்கல்லுாரி தேர்வு முடிவுகளில் உச்சக்கட்ட குளறுபடி

சட்டக்கல்லுாரி தேர்வு முடிவுகளில் உச்சக்கட்ட குளறுபடி

 

முதல் லிஸ்ட்டில் பாஸ்… அடுத்த லிஸ்ட்டில் பெயில்…. சட்டக்கல்லுாரி தேர்வு முடிவுகளில் உச்சக்கட்ட குளறுபடி

புதுச்சேரி சட்டக்கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் குளறுபடியாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியக்காலாப்பட்டில் புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக்கல்லுாரி உள்ளது. இங்கு மூன்றாண்டு சட்டப்படிப்பினை 59 மாணவர்கள் படித்து வருகின்றனர். இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களது ரிசல்ட்டினை புதுச்சேரி பல்கலைக்கழகம் அன்மையில் வெளியிட்டது. இதில் 16 மாணவர்கள் தேர்ச்சியடைந்தும், பிற மாணவர்கள் தோல்வியடைந்து இருந்தனர். நன்றாக படித்த மாணவர்கள் பெயிலாகி இருக்க, படிக்காத மாணவர்கள், சுமராக படிக்கின்ற மாணவர்கள் பாஸ் ஆகி இருந்தனர்.

அதிர்ச்சியடைந்த சட்டக்கல்லுாரி மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை திடீரென திரும்ப பெற்றுக்கொண்டு புதுச்சேரி பல்கலைக்கழகம், புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு கல்லுாரிக்கு அனுப்பி உள்ளது. இந்த தேர்வு முடிவும் சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏற்கனவே பாஸ் செய்திருந்த 16 மாணவர்களில் 10 பேர் தோல்வியை தழுவி இருந்தனர். அதே நேரத்தில் ஏற்கனவே தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்ட ஆவேசமடைந்த சட்டக்கல்லுாரி மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு சென்று முறையிட்டனர். தொடர்ந்து அனைத்து மாணவர்களும் மறுமதிப்பீட்டும் விண்ணப்பித்தனர். இது குறித்து சட்டக்கல்லுாரி மாணவர்கள் கூறும்போது, சட்டக்கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் அலட்சியமாக வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவு எழுதி வைத்திருந்த ஒரு ‘பண்டல்’ மாறிவிட்டதால், ஒட்டுமொத்தமாக தேர்வு முடிவுகள் மாறிவிட்டதாகவும், அதனால் புதிய தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக அலட்சியமாக தெரிவிக்கின்றனர். கவனமாக கையாள வேண்டிய தேர்வு முடிவுகளில் பொறுப்பு இல்லாமல் செயல்பட்டுள்ளனர். இதற்கான காரணமாக அதிகாரிகள் மீது புதுச்சேரி பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

What do you think?

மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர் மாணவ மாணவிகள் புறக்கணித்தும் போராட்டம்

புதுச்சேரியில் வெயிலும் மழையும் மாறி மாறி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு