in

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு கண் சிகிச்சை முகாம்

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு கண் சிகிச்சை முகாம்

பார்வை குறைபாடு உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் ஒருங்கினைப்புக்குழு இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் சடையாண்டி குப்பத்தில் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் கலிவரதன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்பு, கண்புரை கண் நீர் அழுத்தம், வெள்ளொளி உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்பட்டது.

மேலும் பார்வை குறைபாடு கண்ணாடி கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What do you think?

புதுச்சேரியில் நடைபெற்ற காய், கனி, விதை மற்றும் உணவு திருவிழா

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் சாகச பயணம்