in

நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்…..

தஞ்சாவூர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விரல் ரேகை பதிவு செய்தல் பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் என்றும், ஆதார் சரிபார்க்கும் முறையில் 40% மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், டிஎன்சிஎஸ்சி (TNCSC ) எடை தராசுக்கும் நியாய விலைக் கடை அலுவலக கணினியோடு இணைத்து ரசித்து வழங்கிய பின்பு தான் நியாய விலை கடைகளுக்கு நவீன தராசு வைக்க வேண்டும் எனவும் ,பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன், அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவகுருநாதன், மகேந்திரன், ரமேஷ் ,ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் கையில் கொடியுடன் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

பூச்சியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த நீ தானே எந்தன் பொன்வசந்தம் தர்ஷனா