புவனகிரியில் நியாய விலை கடை பணியாளர்கள் 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரி பாலக்கரை அருகாமையில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசே நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமா வழங்குதல் TNCSC எடை தராசும் அலுவலக கணினியும் இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாய விலைக்கடை எடை தராசும் POS விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்களும் கழிப்பிட வசதி ஏற்பட்டு தந்திட உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.