in

நியாய விலை கடை பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பணி புறக்கணித்து போராட்டம்

நியாய விலை கடை பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகம் முழுவதும் சுமார் 30000 க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள கிராமப்புரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் சுமார் 25000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் எடையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

பணியாளர்கள் நலன் கருதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட 10 சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 21.10.24 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் நியாய விலைகடைப் பணியாளர்கள் அனைவரும் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று மலைக்கோயில் பகுதியில் கோரிக்கை மனு ஏந்தி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் போராட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மூன்று அம்ச கோரிக்கைகள்

1. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அலுவலக ந.க.1/4320/2024 நாள்:29.04.2024 ன்படி அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற குடிமை பொருட்களின் இருப்பு குறைவு / அதிகம் மற்றும் போலிபில் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பணியாளர்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகையினை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பணியாளர்கள் தன்னை அறியாமல் செய்த சிறு தவறுகளுக்கு கூட அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுல்லதால் பணியாளர்கள் நலன் கருதி இந்த உத்தரவை ரத்து செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

2. நியாய விலைகடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை பதிவாளர் சுற்றறிக்கைக்கு முறனாக சில மாவட்டங்களில் கட்டாயப்படுத்தி விற்பனை செய்திட விற்பனையாளர்களை நிர்பந்தம் செய்து வருகின்றனர். பொருட்கள் வழங்கிய உடன் சங்க செயலாளர் அனுமதியின்றி காசுக்கடன் கணக்கில் பணத்தை விற்பனை செய்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்கிறது. மேலும் காலாவதியான பொருட்களை திரும்ப எடுத்து கொள்வதற்கு பதிலாக சம்பந்தபட்ட விற்பனையாளர்களை அவ்வாறான தொகையினை திரும்ப செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருகின்றனர். இது முற்றிலும் பணியாளர்கள் நலனுக்கு விரோதமான செயலாகும். ஆகவே கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்திட குறியீடு நிர்ணயம் செய்வதை தவிர்த்தும் காலவதியாகிவிட்டால் சம்பந்தம்பட்ட நிறுவனங்களே பொருட்களை திரும்ப எடுத்துகொள்ளவும் சுற்றிக்கைகள் பிறப்பிக்க வேண்டுகிறோம். உரிய

3. தமிழகம் முழுவதும் கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட நியாயவிலை கடை விற்பனையாளர்கள் சுமார் 100 கி.மீ. க்கு அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் மாவட்டங்கள் புதிதாக உதயமான போது புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் சொந்த மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் காலமும் பணமும் விரையமாகிறது. குறைந்த சம்பளத்தை பெற்று குடும்பம் நடத்த இயலாமல் பெரும்பாலான பணியாளர்கள் சிரமபட்டு வருகின்றனர். ஆகவே தற்போது புதிதாக விற்பனையாளர்கள் தேர்வு செய்வதற்கு முன்பாக ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்களை அருகில் உள்ள நியாய விலைகடைகளுக்கு பணியிட மாறுதல் செய்து அதன் பின்னர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

What do you think?

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

“டானா” புயல் காரணமாக நாகை உள்ளிட்ட 9 துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்