புற்றுநோய் பாதிப்பில் இருக்கும் பிரபல நடிகர்
பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் கம்பெனி தயாரித்த பல படங்கலில் பணியாற்றியவர் சுப்பிரமணி அதனால் அவருக்கு சூப்பர் குட் சுப்பிரமணி என்று பெயர் வந்தது.
படத்தை இயக்கும் ஆசையில் சரவண சுப்பையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் சுப்பிரமணி. அதன் பிறகு இயக்குனர் பவித்ரன் …னிடமும் உதவி இயக்குனராக சுப்பிரமணி பணியாற்றினார்.
பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனாக பணியாற்றியவருக்கு சொந்தமாக படம் எடுக்கும் ஆசை வந்ததால் தானே ஒரு கதையும் தயாரித்து முன்னணி நடிகர்களிடம் கூறினார்.
ஆனால் யாரும் நடிக்க முன் வரவில்லை தெலுங்கு நடிகர்களிடமும் முயற்சித்தார் பலன் இல்லை கடைசி வரை இவர் படத்தில் யாரும் நடிக்க முன் வராததால் சினிமாவில் நடிகராக நடிக்க தொடங்கினார்.
காலா, பரியேறும் பெருமாள், ஜெய் பீம், மகா முனி, ரஜினி முருகன் என்று பல படங்களை நடித்தவர் கடைசியாக பரமன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது அவர் புற்றுநோய் பாதிப்பில் இருப்பதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புற்றுநோயின் நான்காம் கட்டத்தில் இருக்கும் அவருக்கு நோயின் தீவிரமும் மறுபக்கம் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகிறார். அவர் சினிமாத்துறையினர் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.