in

பிரபல இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கம்…. எந்திரன் கதை திருட்டு எதிரொலி

பிரபல இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கம்…. எந்திரன் கதை திருட்டு எதிரொலி

 

பிரபல இயக்குனர் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் 290 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

எந்திரன் தன்னுடைய கதை என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 2007 ஆம் ஆண்டு ஜூகிபா’ நாவலில் இருந்து கதையை திருடிய தான் ஷங்கர் எந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.

1996 இல் தமிழ் மாத இதழான உதயத்தில் வெளியிடப்பட்ட ஜிகுபாவில், மனித மனதை வளர்க்கும் ஒரு ரோபோவை சித்தரித்ததாக தமிழ்நாடன் கூறினார்.

இந்த படத்திற்கு காப்புரிமை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் தமிழ்நாடன். இந்த மனுவின் அடிப்படையில் அமலாக துறையினர் விசாரணையில் நடத்திய போது சங்கர் எந்திரன் படத்திற்கு படத்தை இயக்குவதற்கு 11.50 கோடி சம்பளமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது.

இந்த திரைப்படத்தையும் நாவலையும் ஆய்வு செய்த இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் எந்திரன் ஜூகிபா நாவலை தழுவியே எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் சங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவருக்கு சொந்தமான 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது இது குறித்து சங்கரிடம் 2022 ஆம் ஆண்டு அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை

வசூலை அள்ளும் சாவா திரைப்படத்திற்கு வரி விலக்கு