in

பிரபல திரைப்பட இயக்குனர் அவரது சொந்தக் கிராமத்தில் நல்லடக்கம்


Watch – YouTube Click

பிரபல திரைப்பட இயக்குனர் உடல் அவரது சொந்தக் கிராமத்தில் நல்லடக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் நடிகர் சரத்குமார் நடித்த மாயி,திவான்,மாணிக்கம் பட இயக்குனரின் உடல் நிலக்கோட்டையை அடுத்த, அணைப்பட்டி அருகே சொந்தக் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது அவரது உடலுக்கு நடிகர் சரத்குமாரின் சார்பில் இறுதி மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர் …….

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி அருகே, எஸ்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முத்து அம்பலத்தேவர் மகனான இவர்க்கு இரண்டு அண்ணன் ஒரு அக்காள் மற்றும் வசந்தமலர் (50) என்ற மனைவியும் சோனா (25) என்ற மகளும் உள்ளனர்,

இவர் கடந்த 1990-ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது,

அங்கு பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் தன்னுடைய சுயமுயற்சியால் 2000-ஆண்டில் நடிகர் சரத்குமாரை வைத்து மாயி என்ற பிரபல திரைப்படத்தை இயக்கினார்,தொடர்ந்து 2003-லும் அதே சரத்குமாரை வைத்து திவான் என்ற திரைப்படத்தையும், அதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் நடித்த மாணிக்கம், ஜீவன் நடித்த அதிபர், வருசநாடு,தெலுங்கில் ராஜசேகரை வைத்து பரசின்ன ரெட்டி என்ற திரைப்படத்தையும் இயக்கினார். விரைவில், நடிகர் சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ள நிலையில், (ஞாயிற்றுக்கிழமை இரவு) நேற்று முன்தினம் இரவு இயக்குனர் சூரிய பிரகாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து. அவரின் பூத உடலை சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த எஸ்.வாடிப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் அங்கு கிராம வழக்கப்படி நல்லடக்கம் செய்வதற்கு திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் கிராம பொதுமக்கள் முன்னிலையில் அஞ்சலிக்காக சொந்த கிராமத்தில் அவரது பூர்வீக வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இயக்குனர் சூரியபிரகாஷ் நடிகர் சரத்குமாரின் நெங்கிய நண்பர் என்பதாலும் உடனடியாக இறங்கள் தெரிவித்து அவரது உடலை சொந்த கிராமம் கொண்டு செல்ல அணைத்து உதவிகளும் செய்தார். மேலும் அவரின் சார்பாக உதவியாளர்கள் மற்றும் நண்பர்களான உசிலம்பட்டி சிவமுருகன்,
மதுரை ஈஸ்வரன்
முனைவர் காமராஜ்,
தனராஜ்,
பாண்டியராஜன்
லட்சமனராஜன்,
முகேஷ் உள்ளிட்டோரை அனுப்பி வைத்து தேவையான உதவிகளை செய்தார் அவர்கள் சூரியபிரகாஷ்சின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | Today’s HeadLines 27.5.2024

என்னை நல்ல பெண் லிஸ்டில் சேர்க்க வேண்டாம் ..நடிகை ரேகா நாயர் அதிரடி பேட்டி