பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திருகோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மேடையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மார்கழி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், தேன், மஞ்சள், குங்குமம், கொண்டு சிறப்பு அபிஷேகம் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
நள்ளிரவில் வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஜகத் ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் பூசாரிகள் மேல தாளங்கள் முழங்க அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடிய போத ஏராளமான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அம்மனை பக்தி பரவசத்துடன் வணங்கி அம்மன் அருளை பெற்று சென்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களான புதுச்சேரி,ஆந்திரா கர்நாடகா, பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்.
இவ்விழாவுக்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் போலீசார் பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.