in

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆவணி  மாத ஊஞ்சல் உற்சவம்

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆவணி  மாத ஊஞ்சல் உற்சவம்

நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு கையில் தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம்  பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆவணி  மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக திருகோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மேடையில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.

ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு  அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் சந்தனம் விபூதி தேன் இளநீர் பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

நள்ளிரவில் வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் பலவித மலர்களால், தங்க ஆபரண நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு கணேச ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் பூசாரிகள் மேல தாளங்கள் முழங்க அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடிய போது ஏராளமான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மா தாயே! அருள் புரிவாயே !! என கையில் தீபம் ஏந்தி அம்மனை பக்தி பரவசத்துடன் வணங்கி அம்மன் அருளை பெற்று சென்றனர்.

ஊஞ்சல் உற்சவ விழாவில் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், தீர்மான குழு உறுப்பினருமான செஞ்சி சிவா கலந்து கொண்டு மனம் உருகி சாமி தரிசனம் செய்தார் .

மேலும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்

இவ்விழாவுக்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் போலீசார் பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம்,
அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் பூசாரிஅறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் மணி,
மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

What do you think?

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி Character தீடிர்ரென்று தூக்கபட்டது ஏன்

ராதிகாவிடம் புலனாய்வு குழு விசாரணை…. மேலும் சில நடிகர்கள் விரைவில் கைதாகலாம்