பிரபல டேபிள் டென்னிஸ் வீராங்கனை நைனா ஜெய்ஸ்வால் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல டேபிள் டென்னிஸ் வீராங்கனை நைனா ஜெய்ஸ்வால்.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் பிரபல இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை நைனா ஜெய்ஸ்வால் இன்று விஐபி தரிசனம் மூலம் தனது குடும்பத்தினருடன் சுவாமியை தரிசித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், தேவஸ்தான அதிகாரிகள் கோயில் ஆசாரப்படி அவரது தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தரிசனத்துக்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க பின்னர் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாமியை தரிசிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
அடுத்து யூரோப்பில் நடைபெறும் போட்டிகளுக்குத் தயாராகி வருவதாகக் கூறினார்.