in

அதிரடியாக கைதி செய்த பிரபல தெலுங்கு போசானி கிருஷ்ண முரளி


Watch – YouTube Click

அதிரடியாக கைதி செய்த பிரபல தெலுங்கு போசானி கிருஷ்ண முரளி

 

பிரபல தெலுங்கு நடிகரும் எழுத்தாளருமான போசானி கிருஷ்ண முரளி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

பிரபல நடிகரை ஹைதராபாத்தின் யெல்லரெட்டிகுடாவில் உள்ள நியூ சயின்ஸ் காலனிக்கு அருகிலுள்ள அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர்.

அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட கைது அறிகையின்படி, அவர் மீது BNS பிரிவுகள் 196, 353 (2), மற்றும் BNSS பிரிவு 47 (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்படவில்லை. “(கிருஷ்ண முரளி) மீது குற்றம் சாட்டப்பட்ட பிரிவுகளின் படி அவரால் ஜாமீனில் வெளிவர முடியாதது.

மேலும் அவர் நீதிமன்றக் காவலுக்காக ராஜம்பேட்டையில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்,” காவல்துறையினர் தற்போது நடிகரை ஆந்திராவிற்கு மாற்றுகின்றனர்.

இவர் ஆந்திரா துணை முதல்வரான பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்தனர்.

உடல்நிலை சரியில்லாத தனது கணவரை கைது செய்து இருப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனையும் மேற்கொண்டனர் போலீசார்.


Watch – YouTube Click

What do you think?

பாடகர் நலமுடன் இருக்கிறார்’

கிரிப்டோகரன்சி மோசடி … தமன்னா மற்றும் காஜல் அகர்வாளுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்