in

மதகஜ ராஜா நிகழ்ச்சியில் வாய் குழறி பேச நடுங்கிய விஷால், ரசிகர்கள் கவலை

மதகஜ ராஜா நிகழ்ச்சியில் வாய் குழறி பேச நடுங்கிய விஷால், ரசிகர்கள் கவலை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மதகஜ ராஜா படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால்… பேசமுடியாமல் சிரம்மபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அண்மைக்காலமாக வெளியில் அதிகம் தலை காட்டாத விஷாலுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி ரசிகர்களிடம் எழ துவங்கியது.

10 வருடங்களுக்கு மேலாக மதகஜ ராஜா கிடப்பில் கிடந்த படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகிறது. மத கஜ ராஜா திரைப்படத்தில் நடிகர் விஷால், வரலட்சுமி, அஞ்சலி ,நடிகர் சந்தானம், சோனு சூட், மற்றும் மறைந்த நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் Pre-event நிகழ்ச்சியில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர் சி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி கலந்து கொள்ள DD தொகுத்து வழங்கினார்.

விஷால் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் உரையாடிய போது நடுக்கத்துடன் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அனைவருக்கும் மாலை வணக்கம் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கி உள்ளது என்று தொடர்ந்த அவரால் மேற்கொண்டு பேச முடியாமல் கைகள் நடுங்க பேசுவதற்கு சிரமப்பட்டு, நடக்க தடுமாறினார்.

அரங்கிற்குள் நுழையும் போது கூட, விஷால் உதவியாளரை’ பிடித்து கொண்டு நடந்து. வந்தார் அவருக்கு Virus காய்ச்சல் இருந்த, போதிலும் உடல்நிலை சரியில்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ரசிகர்கள் அவரை பாராட்டினர்.

What do you think?

போராட்டம் நடத்து முயன்ற விவசாய சங்க தலைவருக்கு வீட்டுச் சிறை போலீசார் பாதுகாப்பு

நாகையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்