செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 97…ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள்
இவரின் நடிப்பு திறமையை பார்த்து பிரமித்து ஆச்சரியப்பட்ட பிரெஞ்சு அரசே இவருக்கு செவாலியர் விருதை கொடுத்து மகிமை படுத்தியது.
எப்படிப்பட்ட கேரக்டரை கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார், தமிழ் திரையுலகுக்கு சிவாஜி கணேசன் கிடைத்த அரிய பொக்கிஷம் இவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை பராசக்தி படத்தின் மூலம் பட்டை தீட்டியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
படிக்காத மகா நடிகன் எத்தனை பக்க டயலாக்கை கொடுத்தாலும் அசராமல் நளினமாக பேசி ஈத்து விடுவார், இப்படிப்பட்ட மகா நடிகன் பிறந்ததும் இல்லை இனிமேல் பிறக்க போவதும் இல்லை.
Y.G. மகேந்திரன் கூறியிருக்கிறார் வீரபாண்டியன் கட்டபொம்மன், கர்ணன் அவர்களைப் பற்றி நாம் நினைக்கும் போது நம் கண் முன்னே வந்து நிற்ப்பது சிவாஜி கணேசனின் உருவமே.
இந்த மகா நடிகனின் 97வது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் அவரின் அன்னை இல்லத்திற்கு எம். எஸ். பாஸ்கர் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூய அஞ்சலி செலுத்தி கூறியதாவது.
இந்த உலகத்தில் எனக்கு மூன்று அப்பாக்கள் ஒன்று என்னுடைய அப்பா, இரண்டாவது தந்தை கருணாநிதி ஐயா, மற்றொருவர் சிவாஜி அவர்கள். நான் காலையில் எழுந்தவுடன் சிவாஜிகணேசன் அவர்களின் படத்தையும் பாடலையும் பார்த்துவிட்டு தான் வேலைக்கு செல்வேன் அப்பொழுதுதான் எனக்குள் உற்சாகம் ஏற்படும் .
இவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம் எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை, நானும் அவரது நடிப்பை பார்த்து அவரை போல நடிக்க வேண்டும் என்று தான் முயல்கிறேன் ஆனால் முடியவில்லை என்று கூறினார்.