பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி கூலி விவசாயி பலியானார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், வீரையன் வயது 55 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் வீரையன் இன்று காலை தனது வீட்டின் பின்புறத்துக்கு சென்ற பொழுது உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்தது தெரியாத நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி வீரையனின் மகன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வீரையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.