in

காட்டு யானைகள் மிதித்து விவசாயி பலி

காட்டு யானைகள் மிதித்து விவசாயி பலி

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேறு அருகே இருக்கும் பந்தறுவண்ட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்ன ராஜா ரெட்டி.

பீலேறு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் நேற்று இரவு தன்னுடைய விளை நிலத்தில் அவர் காவலுக்கு சென்று படுத்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த 10 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டத்தை பார்த்த அவர் அவற்றிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

ஆனால் சின்ன ராஜா ரெட்டியை விரட்டி சென்ற காட்டு யானை கூட்டம் அவரை பிடித்து தூக்கி போட்டு மிதித்துள்ளது.

காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் ராஜா ரெட்டி மரணம் அடைந்து விட்டார்.

ராஜா ரெட்டி மரணம் பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பீலேறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

தங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு

நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியில் உள்ள சிவ ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு