in

யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு. கண்டு கொள்ளாத வனத்துறை


Watch – YouTube Click

யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு. கண்டு கொள்ளாத வனத்துறை

 

பண்ணப்பட்டி அருகே யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு. கண்டு கொள்ளாத வனத்துறையினர். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பொருட்கள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான கன்னிவாடி தர்மத்துப்பட்டி பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் பண்ணப்பட்டி அருகே உள்ள கருப்புன்சேர்வைக்காரன் பட்டியில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு யானைகள் பரமன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிட்ட முருங்கை தென்னை தக்காளி கத்திரி உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்ததது.

இதனால் தங்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் மேலும் இது பற்றி பலமுறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே யானைகள் அவ்வப்போது தோட்டத்திற்குள் புகுந்து மிகுந்த அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் எனவும் அதேபோன்று நஷ்ட ஈடு உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கஞ்சா குற்றவாளி படுகொலை முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து ஆயுதங்கள் பறிமுதல்

இங்கிலிஷ் கால்வாயை கடக்க முயன்ற 5 பேர் பரிதாபம்