நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிசம்பர் 10) காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து 10 மாவட்டங்களுக்கு கனமழையை செய்யக்கூடும் என அறிவித்திருந்தது அதன்படி இன்று அதிகாலை முதல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை, திருப்பூண்டி, பூவை தேடி, விழுந்தமாவடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.
மேலும் சில தினங்களாக மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய துவங்கி இருப்பது சம்பா விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.