in

சரியான வடிகால் இல்லாததா விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை


Watch – YouTube Click

சரியான வடிகால் இல்லாததாலும் தண்ணீர் வடிய சட்ரஸ் இல்லாததா லும் பல ஆண்டுகளாக 3000 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை…

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேல ராமன் சேத்தி என்ற கிராமம். இந்த கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த ஆற்றில் இருந்து பிரியக்கூடிய சாலியன் வாய்க்கால் பாசன வாய்க்காலாகவும் வடி வாய்க்காலாகவும் அமைந்துள்ளது.

ஆனால் இந்த சாலியன் வாய்க்கால் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளதால் சரியாக தூர்வாரப்படாததால்

தற்போதைய கோடை மழையிலேயே தண்ணீர் வடிய வழியில்லாமல் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய சாகுபடி நிலங்களை சூழ்ந்து கோடை சாகுபடியாக செய்யப்பட்ட பருத்தி , எள், நெல் உள்ளிட்ட சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே விவசாயிகள் இந்த கோடை மழையிலேயே இந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளார்கள் எனவும், ஆண்டுதோறும் எங்களுக்கு மழைக்காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்

ஆகவே சாலியன் வடி வாய்க்காலை நன்றாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கொடுக்க வேண்டும் என்றும் சாலியன் வடிவாய்க்கால் வரக்கூடிய பகுதியில் திருமலை ராஜன் ஆற்றை ஒட்டிய பகுதியில் ஒரு சட்ரஸ் அமைத்து நீண்ட நெடிய இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த 3000 விவசாய சாகுபடி நிலங்களை காக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

*இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பிரிந்து ஓடக்கூடிய சாலியன் வடி வாய்க்காலை விரைந்து தூர்வாரி கொடுப்போம் எனவும் ,விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான திருமலை ராஜன் ஆற்றில் தண்ணீரை வடிய வைக்க சட்ரஸ் ஒன்று அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்கள்.


Watch – YouTube Click

What do you think?

முடிவுக்கு வந்த காவல்துறை போக்குவரத்துறை பிரச்சனை

திருத்துறைப்பூண்டியில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு