அணைகள் மற்றும் கண்மாய்கள் நீர் வற்றி வருவதால் விவசாயிகள் கவலை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையிலும் வெயிலின் தாக்கம் என்பதும் அதிகமாகவே காணப்படுகிறது.ஒருபுறம் பொதுமக்கள் கடும் வெயிலின் காரணமாக பாதிக்கப்படும் நிலையில் மறுபுறம் விவசாயிகளும் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.
அதாவது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படக் கூடிய பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கண்மாய்களில் நீர் என்பது வேகமாக குறைந்து வருகிறது.
பருவ மழை காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாவட்டத்தின் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படக்கூடிய பிளவக்கள் பெரியாறு அணையானது 47 அடி அதன் முழு கொள்ளவை எட்டி பின்பு விவசாயத்திற்கு பாசன வசதிக்காக நீரானது திறக்கப்பட்டது .
இந்த அணையை நம்பி பெரியகுளம், S.கொடிக்குளம், விராகசமுத்திரம், குணவந்தநேரி , சுந்தரபாண்டியன், பூரிபாறை குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கன்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதனால் அணையில் இருந்து நீர் திறப்பின் போது ஜனவரி மாதத்தில் 50 கண்மாய்களுக்கும் நீர் சென்று கண்மாய்களானது அதன் முழு கொள்ள வை எட்டியது.
தற்போது வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் கோடை நெல் விவசாயம் என்பது சுமார் 6500 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.கோடை வெயிலின் காரணமாக அணைகள் மற்றும் கண்மாய்களின் நீர் வேகமாக குறைந்து வருகிறது.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் 47 அடியாக இருந்த நிலையில் தற்போது 26 அடியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
நாள்தோறும் 2 முதல் 3 சென்டிமீட்டர் வரை நீர் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கன்மாய்களி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளித்த நிலையில் தற்போது வறண்டு காணப்படுகிறது.
இந்த முறை கோடை நடவு விவசாயத்தை ஓரளவுக்கு விவசாயிகள் காப்பாற்றினாலும் அடுத்த, நடவுப்பணிக்கு விவசாய பணி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.