in

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அரசு வேளாண்மை மையங்களில் போதிய அளவு விதை நெல்கள் கிடைக்காததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து
டெல்டா பாசனத்திற்காக ஜூலை 28-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும் காலம் கடந்ததால் இந்த தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

சமீபத்தில் பெய்த மழையால் விவசாயிகள் டிராக்டர் கொண்டு விளை நிலங்களை உழுது சம்பா நேரடி விதைப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விட்டுக்கட்டி, வரம்பியம் ன, மருதவனம், மாங்குடி, ஆலத்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேளாண்மை மையத்தில் விதை நெல்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தனியார் நிறுவனத்தில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக வேளாண்மை மையத்தில் போதிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இருப்பு வைக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் மேலும் தண்ணீரை முறை வைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

பழனியில் 53 ஆம் ஆண்டாக ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழாவை முன்னிட்டு 500ற்கும் மேற்பட்டோர் கஞ்சி கலைய ஊர்வலம்

தஞ்சை மாவட்டம் மருத்துவக்குடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கநாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்