in

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

 

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணிக்கான கள ஆய்வை மின்வாரியத்தினர் நடத்தி வருவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார். எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் மறைமுகமாக அதிகாரிகள் இதுபோன்று ஈடுபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் ஆட்சியரிடம் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்ட த்தில் வேளாண் துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் மின்வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் பல்வேறு கல்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பேசிய விவசாயி பெரும்படையார் நெல்லை மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணிக்கான கணக்கெடுப்புகளை மின்வாரிய அதிகாரிகள் நடத்தி வருவதாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இலவச மின் இணைப்பை பெற்ற விவசாயிகள் இதுபோன்ற மின்வாரியத்தின் செயலால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார் இதனை தொடர்ந்து பதில் அளித்த ஆட்சியர் தமிழக அரசு விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது.

எந்த விதமான அறிவிப்பும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவது தொடர்பாக கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார் இருந்தபோதிலும் அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் தங்களது தோட்டத்திலேயே கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மின்வாரிய அதிகாரியை அழைத்த ஆட்சியர் உரிய விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தர உத்தரவிட்டதுடன் செயற்பொறியாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைக்கு நீர்வளத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில்கள் எதுவும் முறையாக இல்லை என நீர்வளத்துறை அதிகாரிகளை ஆட்சியர் கடிந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியவுடன் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

What do you think?

கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா கோமதி அம்பாள் திருத்தேரோட்டம்

ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவாசக முற்றோதல் பேரவையின் 500 ஆவது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது