ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் சுமார் பத்து மணி அளவில் பலத்த மழை பொழிய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்த நிலையில் அதோடு குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு விவசாயம் நாற்று விட்டு வரும் நிலையில் நாற்று கருகி போகும் அவல நிலை காணப்பட்டது.
தற்பொழுது மழை பொழிந்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதோடு வயதானவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்த நிலையில் தற்போது இப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.