இரண்டு ஆண்டுகளாக இன்சூரன்ஸ் தொகை வழங்காததால் சிதம்பரம் புறவழி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை தெற்கு, கிள்ளை வடக்கு, நஞ்சமகத்துவாழ்க்கை, சி.மானம்பாடி, தில்லைவிடங்கன், மேலச்சாவடி, பின்னத்தூர் கிழக்கு, பின்னத்தூர் மேற்கு, கொடிபள்ளம், ராதாவிளாக்கம், உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்களில் சுமார் 7000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2022, 2023, ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்த நிலையில் இரண்டு ஆண்டுகள் மழை வெள்ளத்தில் பயிர்கள் சேதம் ஆகி உள்ளது, ஆனால் அதனை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சேதமான பயிர்களுக்கு உரிய முறையில் முறையில் இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்ததால் இன்று அந்தந்த வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதனை அடுத்து கான்சாஹிப் பாசன வாய்க்கால் விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் புறவழி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் காலை முதல் காத்திருக்கும் நிலையில் உயர் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் யாரும் வராதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் சில அதிகாரிகளை உள்ளே வைத்து கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளைத் தொடர்ந்து காப்பீடு என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் விவசாயிகளின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விவசாயிகளிடம் முன்னறிவிப்பு இன்றி வேளாண்மை அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தது சட்ட விரோத செயல் எனவும் விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.