in

நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சிதம்பரத்தில் குருவை சாகுபடிக்கு சரியான முறையில் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண கணக்கெடுப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்து காந்தி சிலை அருகில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், தமிழக அரசு உடனடியாக காப்பீட்டு தொகையும் நிவாரண தொகையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை.

சிதம்பரம் அடுத்த குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வையூர், காட்டுக்கூடலூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வடக்கு மாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குருவை சாகுபடிக்கு சரியான முறையில் காப்பீட்டுத் தொகை வாங்காமலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண கணக்கெடுப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் இதுவரையில் நிவாரணம் வழங்காததை கண்டித்து 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் எங்களுக்கு நடப்பு குருவைக்காண காப்பீடு செய்திருந்தோம் அதற்கு அரசு நிவாரணத் தொகை அறிவித்திருந்தது ஆனால் அது சரியான முறையில் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்கவில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் அது மட்டுமில்லாமல் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய தொகை அறிவித்திருந்தும் கணக்கெடுப்பு முடிந்த நிலையிலும் இதுவரையில் நிவாரண தொகை வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் அதிகாரிகளிடம் சென்று கேட்டால் ஆன்லைன் இருக்கிறது ஜி.ஓ.வரவில்லை என தெரிவிக்கிறார்கள்.

இதுவரையில் அந்த நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை ஆகவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இன்றைக்கு 4 கிராம மக்கள் சேர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார்கள் இது 40 ஆகும் அடுத்தது 400 ஆகும் அடுத்தது 4000 ஆகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

What do you think?

வேடசந்தூர் அருகே கள்ளியடி குருநாதரின் 84வது குருபூஜை விழா பிரமாண்ட அன்னதானம்

நாமக்கல் மோகனூரில் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம்