in

தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள், உளுந்து பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கோடைகால பயிரான பருத்தி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது. அண்மையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பருத்திப்பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 30,000 இழுப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தினர்.

இதுவரை அதற்கான கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக விவசாயிகள் இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், இன்சுரன்ஸ் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாட்டில் இயங்கி வந்த பருத்தி கழகத்தை கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டதற்கு விவசாயிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதிலிருந்து எல்லோருக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

பேட்டி சேதுராமன் தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர்.


Watch – YouTube Click

What do you think?

நோயோடு போராடிருக்கும் என்னை தனியா விட்டு…ட்டு போய்ட்டாரு

உதயநிதி திகார் சிறைக்கு செல்வார் பாஜக சிறுபான்மையினை செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டி