in

செய்யாறில் சிஇஓ, டிஇஒவை மாற்றக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

செய்யாறில் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரில் சிஇஓ, டிஇஒவை மாற்றக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரில் சிஇஓ, டிஇஒவை மாற்றக்கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் 10, மற்றும் 12 ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி இடம் இடம்பெற்றுள்ளது இதனை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,கையில் ஆணி, சுத்தி, பலகையுடன்
விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு கல்விக்காக செயல்படுத்தும் திட்டங்களை ஒவ்வொன்றாக பலகையில் ஆணி மூலம் அடித்து விளக்கிக் கூறி அதை ஒன்று கூட சரியான முறையில் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறை பல சிறப்பு திட்டங்களின் செயல்பாட்டால் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது .

ஆனால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 80 லட்சம் மாணவ மாணவியர் அரசு பள்ளிகளில் பயில பள்ளி கல்வித்துறை 2024 மாநில பட்ஜெட்டில் சுமார் 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஒரு நபருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வீதம் செலவிடுகிறது. இதில் 1 முதல் 5 வரை 18 லட்சம் மாணவ மாணவியர் பயில்கின்றனர் பள்ளி வேலை நாட்கள் 160 முதல் 180 நாட்கள் வரை நடைபெற ஒரு பட்டதாரி ஆசிரியர் ஒரு நாளைக்கு 4 வகுப்பு என 160 நிமிடங்கள் பாடம் நடத்த ஆண்டுக்கு 500 மணி நேரம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறார்.

இதற்காக ஒரு மணி நேரத்துக்கு 2000 ரூபாய் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர் இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்ச்சி மாநில அளவில் கடைசி இடம் என திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கி உள்ளது. அரசு பள்ளிகளின் மேல் நம்பிக்கை இழந்த பெற்றோர்கள் புற்றீசல் போல் முளைத்த தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.

தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சம்பளம் குறைந்த பட்சம் ரூ. 15,ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர் உழைப்பு ஊதிய சட்டம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் என தனியார் ஆசிரியர் மீது திணித்து ஊதியம் வழங்குவதில் கணக்கீடு செய்வது போல அரசு பள்ளிகளும் வழங்க வேண்டும். மேலும் அரசு பள்ளியை கண்காணிப்பு செய்ய வேண்டிய டிஇஓ ,சிஇஓ செயல்படாததால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது அரசு பள்ளி தரம் உயர்த்த 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் காலை உணவு திட்டம் 600 கோடி செலவில் செயல்படுகிறது. 2020 கொரோனா முடக்கம் செய்த நிலையில் 1 முதல் 5 வரை மழலைகள் கல்வி தொடர 2020-ல் 24 லட்சம் மழலைகள் பயன்பெற 1.65 லட்சம் தன்னார்வலருடன் மாதம் ரூ.1000 ஊதியம் பெற்று திட்டம் நடைபெற இல்லம் தேடி கல்வித் திட்டம் ரூ. 200 கோடி செலவிடப்பட்டது பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிரப்ப ஆசிரியர் பயிற்சி (டெட்) தேர்ச்சி, இல்லம் தேடி பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி கல்வி மேலாண்மை குழு மூலம் 14,000 பேர் பணி நியமனம் செய்து மாத ஊதியம் 15,000 முதல் 18000 ரூபாய் வரை வழங்கியது இத்திட்டத்தில் பணி நியமனம் செய்ததில் டி இ ஓ , சி இ ஓ முறைகேடு செய்து பல கோடி ஊழல் செய்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 960 பேர் பணி நியமனம் என்பது குறிப்பிடத்தக்கது உள்கட்ட அமைப்பு மேம்படுத்த ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டிடம் ஒன்றுக்கு ரூ.28 லட்சம் ஒதுக்கீடு என மாநில பட்ஜெட்டில் 436 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விட்டதில் டி இ ஓ, சி இ ஓ ஒப்புதலுடன் ஊழல் நடந்துள்ளது இடைநிலை கல்வி ஆசிரியர் கையடக்க கணினி சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வழங்கி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது அனைவருக்கும் கல்வி திட்டம் எஸ் எஸ் ஏ ஆண்டுக்கு சுமார் 4000 கோடி செலவில் தளவாட பெறுவதில் டிஇ ஓ ,சி இஓ கமிஷன் பெற்று செலவிட்டதில் ஊழல் நடந்துள்ளது தொடக்கப் பள்ளிகளில் கல்வி மேம்பட நுழை- நட -ஓடு பற திட்டம் மழலைகள் எளிதில் பயில பள்ளிக்கு 50 கதை புத்தகம் வழங்க கொள்முதல் செய்ததில் டி இ ஓ, சிஇஓ முறைகேடு நடந்துள்ளது ஆசிரியர்கள் கற்பிப்பதில் மேம்பட கற்றல் அடைவுகள் வலுவூட்ட மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் மேம்பாடு செய்து தங்கள் பணவரவு கோரிக்கை அரசு உடனுக்குடன் செய்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கல்வியில் பின் தங்க காரணமாக டிஇ ஓ, சிஇ ஓ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

பெட்ரோல் பங்கில் ரூபாய் 47 லட்சம் கையாடல்

கொள்ளிடம் பாலத்தில் நடுவில் உள்ள சிமெண்ட் கட்டையில் இரண்டு சக்கர வாகனத்தை ஒட்டி சாகசம்