மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை சாலியமங்கலம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை ஒட்டி கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த தினங்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.