in

உழவர் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


Watch – YouTube Click

உழவர் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி கிராமத்தில் கோடை காலத்தில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறை விவசாயி மாமரங்களுக்கு நடுவே நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளார். தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்த அழகேசன். வேதாரண்யம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணி உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

கோடை வெயில் அதிகரிப்பால் தர்பூசணி பற்றாக்குறை நிலவி வரும் இந்த நிலையில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் ஏற்றுமதி பாதிப்பு அடைந்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக தர்பூசணி செடிகள் கருகத் தொடங்கியுள்ளது. காய்த்து கிடக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது சுமார் 100 டன் தர்ப்பூசணி விற்க முடியாமல் வயல்களிலே தேக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக கிலோ 20 முதல் 30 வரை விற்பனையாகும் தற்போது தர்பூசணி 10 முதல் 15 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.

எனவே விவசாயிகளிடம் இருந்து உழவர் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க மனு